காட்டு யானை மிதித்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி!

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் – டேராடூன் நெடுஞ்சாலையில் இன்று (நவம்பர் 12) அதிகாலை அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அப்போது சாலையின் குறுக்கே வந்த காட்டு யானையைக் கண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த யானை, கீழே விழுந்தவரின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் இரண்டு முறை மிதித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அந்த நபர் காயமின்றி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் ஒருவர் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதற்கிடையே, இந்தப் பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால், அந்த நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.




கருத்துகள் (0)