கோல்டு ஃப்ளேக் சிகரெட் விலை மீண்டும் உயர்வு.. ஒரு பாக்கெட் ரூ.135 ஆக அதிகரிப்பு!

ஐடிசி நிறுவனம் தனது கோல்டு ஃப்ளேக் பிரீமியம் ஏ சிகரெட் பாக்கெட்டின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே ரூ.125-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு பாக்கெட்டின் விலை, தற்போது மேலும் ரூ.10 அதிகரிக்கப்பட்டு ரூ.135 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மட்டும் இந்த சிகரெட் ரகத்தின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து விலையேற்றம் செய்யப்படுவதால், சிகரெட் பயன்படுத்துவோர் முன்பைவிட கூடுதல் தொகையைச் செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் கூடுதல் செலவுச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)