வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
அரசியல்

காவல்துறையை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

காவல்துறையை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது, அந்த நிகழ்வை தொலைக்காட்சி மூலமாகத்தான் தெரிந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியதை நினைவுபடுத்தியுள்ளார். மேலும், கூவத்தூரில் தங்கியிருந்தபோது காவல்துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியவர்கள், தற்போது காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வது சரியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் நிர்மல் குமார் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.