தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் நிர்வாகி புகார்.. 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது, அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார். கடந்த நவம்பர் 12ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த அவர், கருப்பசாமி தன்னிடம் சாதியைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசியதுடன், பாலியல் ரீதியாகவும் தொந்தரவு செய்ததாகக் குற்றம்சாட்டி மனு அளித்துள்ளார்.
இந்தப் புகார் மனு விசாரணைக்காக காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிஎஸ்பி பாஸ்கர் தலைமையிலான போலீசார் புகார் அளித்த பெண் நிர்வாகியின் வீட்டிற்கே நேரில் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.




கருத்துகள் (0)