கேரளாவில் 4 மாதக் குழந்தை உயிரிழந்த வழக்கு: பெற்றோர் இருவர் கைது!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே குட்டிக்கட்டூரில், கடந்த அக்.1ஆம் தேதி நான்கு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் பெற்றோர் ஷிஜின் மற்றும் அஞ்சனா ஆகியோரை மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பிரேதப் பரிசோதனையில் குழந்தை துன்புறுத்தலுக்கு ஆளானதால் உயிரிழந்ததாகத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணையின்படி, தந்தை குழந்தையைத் தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், சம்பவத்தைத் தாய் மறைத்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தையின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)