திங்கள், அக்டோபர் 19, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மகள் கண் முன்னே தலித் இளைஞர் அடித்துக் கொலை: உத்தரப் பிரதேசத்தில் 4 பேர் கைது!

மகள் கண் முன்னே தலித் இளைஞர் அடித்துக் கொலை: உத்தரப் பிரதேசத்தில் 4 பேர் கைது!

 

 

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் மனோஜ் கௌதம் (35) என்ற தலித் இளைஞர், தனது மகள் கண் முன்னே கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடலருகே குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சுபம் சிங் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்துக்கு பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.