ஞாயிறு, அக்டோபர் 25, 2026
உண்மையின் குரல்
இந்தியா

டெல்லியில் அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த மாணவர் சங்கத் தலைவர்!

டெல்லியில் அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த மாணவர் சங்கத் தலைவர்!

 

 

டெல்லியில் அமைதியைப் பேணுவதற்கான பத்திரத்தில் கையெழுத்திடுமாறு போலீசார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா மறுப்பு தெரிவித்துள்ளார். ரூ.10,000 தனிப்பட்ட பிணையத் தொகையுடன், மற்றொருவரின் உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும் என போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இதையடுத்து, அமைதிப் பத்திரம் என்ற நடைமுறை ஜனநாயக எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படுவதாக நேஹா போரா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், போலீசார் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.