வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கோவை சிறுமி கொலை வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!

கோவை சிறுமி கொலை வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என கோவை சிறப்பு போக்சோ நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

 

இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்த விவரங்கள் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால், அன்றைய தினம் இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.