வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மழை பாதிப்பு மற்றும் பயிர்ச்சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

மழை பாதிப்பு மற்றும் பயிர்ச்சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

தமிழ்நாட்டில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதங்களை முறையாகக் கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலவரத்தை அறிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

 

மழைப்பொழிவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நேரடியாகச் சென்று கள ஆய்வு நடத்தி நிலைமையை மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள், விவசாயப் பயிர்களின் சேதம் மற்றும் விவசாயிகளின் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதிப்புகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.