வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ரோந்து பணியில் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்று மிரட்டல் பிரபல ரவுடிகள் இருவர் கைது!

ரோந்து பணியில் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்று மிரட்டல் பிரபல ரவுடிகள் இருவர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே கடந்த 25-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு நின்றுகொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்க முயன்றதுடன், கொலை மிரட்டலும் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

இதையடுத்து, தப்பியோடிய நபர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகளான பொன்மணி மற்றும் இசக்கிராஜா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.