வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கேக்! ரூ.9.27 கோடியில் தமிழக அரசு புதிய திட்டம்!

குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கேக்! ரூ.9.27 கோடியில் தமிழக அரசு புதிய திட்டம்!

நாடு முழுவதும் நாளை (நவம்பர் 14) குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

 

இதற்காக மொத்தம் ரூ.9.27 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, மாணவர்களுக்கு வழங்குவதற்காக 45 கிராம் எடை கொண்ட கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் தினத்தன்று பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இந்த கேக்குகளை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

இந்த புதிய திட்டத்தை இன்று சென்னை கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மேற்கொண்டுள்ள இந்த ஏற்பாடு பள்ளி மாணவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.