புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.10,000 ஆக உயர்வு!

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.10,000 ஆக உயர்வு!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் நகைக்கடனுக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சம் ரூ.7,000 வரை கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தத் தொகை ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என புதிய கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் கூட்டுறவு நிறுவனங்களில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவோர் கூடுதல் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

மேலும், இந்த உயர்த்தப்பட்ட கடன் வரம்பு புதிதாக வழங்கப்படும் நகைக்கடன்களுக்கும், ஏற்கனவே பெற்ற கடன்களை புதுப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.