புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கார்த்திகை தீப விளக்கால் தீ விபத்து 90 வயது மூதாட்டி பரிதாப உயிரிழப்பு!

கார்த்திகை தீப விளக்கால் தீ விபத்து 90 வயது மூதாட்டி பரிதாப உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கார்த்திகை தீபத்தன்று வீட்டில் ஏற்றப்பட்ட அகல் விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் 90 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

முடவனூர் பகுதியில் மூதாட்டியின் வீட்டுத் திண்ணையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. அப்போது விளக்கில் இருந்து பரவிய தீ வீட்டிற்குள் இருந்த கட்டிலின் போர்வையில் பற்றியதாக கூறப்படுகிறது. தீ மளமளவென பரவிய நிலையில், கட்டிலில் படுத்திருந்த மூதாட்டி தீயில் சிக்கிக்கொண்டார்.

 

இந்த விபத்தில் கட்டிலுடன் மூதாட்டியின் உடல் தீயில் கருகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கார்த்திகை தீபத்தன்று ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.