செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு ஜவாஹிருல்லா பாராட்டு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு ஜவாஹிருல்லா பாராட்டு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாரம்பரிய நடைமுறைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டியுள்ளார். பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்பதை அரசின் முடிவு வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் உறுதியான நடவடிக்கை வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ள ஜவாஹிருல்லா, நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறைகளைப் பாதுகாப்பதில் அரசு எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.