பெற்றோரின் சொத்துகளைப் பெற்றுவிட்டு கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறை!

முதியோரின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பெற்றோரிடம் இருந்து சொத்துகளைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதியவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும், அவர்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சொத்துகளைப் பெற்றுக்கொண்டு பெற்றோரை பராமரிக்காமல் விடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்தப் புதிய விதிமுறை வழிவகுக்கும்.
இதுகுறித்து பேசிய கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், முதியோரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு சட்டத்தை கேரளா நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)