செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்பனை 8 பேர் கைது!

சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்பனை 8 பேர் கைது!

சென்னை சூளைமேடு பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 100 கிராம் மெத்தம்பெட்டமைன், 9 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் நேபாள எல்லைப் பகுதியிலிருந்து போதைப்பொருளை வாங்கி வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.