சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

மகளிர் ஆசிய ஹாக்கி இறுதிப்போட்டி இன்று இந்தியா – சீனா மோதல்!

மகளிர் ஆசிய ஹாக்கி இறுதிப்போட்டி இன்று இந்தியா – சீனா மோதல்!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனால் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காக மோத உள்ளன.

 

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி மலேசியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

 

மற்றொரு அரையிறுதியில் சீனா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இதில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

 

இதையடுத்து, இன்று (நவம்பர் 28) இரவு 7 மணிக்கு நடைபெறும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.