வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறி வீடுகளில் கொசு மருந்து தெளித்த மர்ம நபர்கள்.. 3 பெண்களுக்கு மூச்சுத்திணறல்!

மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறி வீடுகளில் கொசு மருந்து தெளித்த மர்ம நபர்கள்.. 3 பெண்களுக்கு மூச்சுத்திணறல்!

சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அங்குள்ள வீடுகளுக்குச் சென்று கொசு மருந்து தெளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் செயல்பாட்டை நம்பி வீடுகளில் மருந்து தெளிக்க அனுமதித்த நிலையில், அதன்பிறகு சில பெண்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், சுமதி மற்றும் சுமித்ரா ஆகிய இரண்டு பெண்களுக்கும் மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட பகுதியில் கொசு மருந்து தெளிப்பதற்காக மாநகராட்சி சார்பில் எந்த ஊழியர்களும் அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறி வீடுகளுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் யார், அவர்கள் எதற்காக மருந்து தெளித்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.