அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை.. 366 மாணவர்களுக்கு தமிழக அரசு அனுமதி!

அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் மொத்தம் 366 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனுமதி பெற்ற 366 மாணவர்களில் 165 பேர் ஏற்கனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்களில் 84 மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக இதுவரை ரூ.30.24 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 201 மாணவர்களும் 2027ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து உயர்கல்வியைத் தொடங்க உள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.




கருத்துகள் (0)