மதுரை நீதிமன்றத்தில் கைதி தப்பியோட்டம் – தவெக அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்!

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜா என்ற கைதி, இன்று (நவம்பர் 12) காவலர்களின் கண்காணிப்பையும் மீறி தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழகத்தின் தவெக அரசை விமர்சித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், இது காவல்துறை மற்றும் சிறைத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டைக் காட்டுவதாகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக நடைபெறும் கைதிகள் தப்பியோடும் சம்பவங்களைக் கிண்டல் செய்யும் வகையில், இதற்கு ‘வெற்றி ஓட்டம்’ என்று பெயர் வைக்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.




கருத்துகள் (0)