திருநங்கை மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் முழு கல்வி உதவித்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2026–27 கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் 24 திருநங்கை மாணவர்களும், முதுநிலைப் படிப்புகளில் 12 பேரும் மட்டுமே சேர்ந்துள்ளனர். உயர்கல்வியில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் சவால்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, திருநங்கை மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு புதிய கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, 50 அரசு கல்லூரிகள் மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் பயிலும் திருநங்கை மாணவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளைச் சமாளிக்க தலா ரூ.2 லட்சம் முழு கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது.
உயர்கல்வியில் திருநங்கைகளின் பங்கேற்பை அதிகரிக்கவும், பொருளாதாரத் தடைகளைக் குறைக்கவும் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)