நடைப்பயிற்சியின்போது திடீரென மயங்கி விழுந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (75), நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இதய நரம்பியல் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜகதீப் தன்கருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்டுள்ள உடல்நலப் பாதிப்புக்கான காரணம் மற்றும் அவரது தற்போதைய மருத்துவ நிலை குறித்த விரிவான அறிக்கை மருத்துவமனை தரப்பில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)