வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

பேட்டரி கழிவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

பேட்டரி கழிவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

இந்தியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் திறனை அதிகரிக்கவும், அவற்றில் உள்ள விலைமதிப்பற்ற கனிம வளங்கள் வீணாவதைத் தடுக்கவும் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, லித்தியம்-அயன் பேட்டரி கழிவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) தடை விதித்துள்ளது.

 

பயன்பாடு முடிந்த லித்தியம்-அயன் பேட்டரிகளில் இருந்து கிடைக்கும் 'பிளாக் மாஸ்' எனப்படும் மறுசுழற்சி மூலப்பொருளில் லித்தியம், கோபால்ட் உள்ளிட்ட முக்கியமான கனிமங்கள் உள்ளன. இவை மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தயாரிப்புத் துறைக்கு மிகவும் தேவையான வளங்களாகக் கருதப்படுகின்றன. இத்தகைய கனிமங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து, இந்தியாவிலேயே அவற்றை மீட்டெடுத்து மறுசுழற்சி செய்வதே இந்தத் தடையின் முக்கிய நோக்கமாகும்.

 

இந்த நடவடிக்கையால் உள்நாட்டு மறுசுழற்சித் தொழில்துறைக்கு ஊக்கம் கிடைப்பதுடன், முக்கியமான கனிமங்களுக்கான வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையும் குறைய வாய்ப்புள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து கனிமங்களை வாங்குவதற்குச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.