திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 26 வயது தொழிலாளி கைது; தப்பியோடியபோது கால் முறிவு!

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 12 வயது பள்ளி மாணவியைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, அவரது கைகளைக் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 26 வயதான விஷ்ணு என்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அய்யம்பாளையம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த விஷ்ணுவைப் பிடிக்க போலீசார் சென்றுள்ளனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓட முயன்ற அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் இடது காலில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரைப் பிடித்த போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் காயமடைந்த விஷ்ணுவை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமிக்கு எதிரான இந்தக் குற்றச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)