பாலக்காடு அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 20 சவரன் கொள்ளை!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பெரிங்கோட்டுக்குரிசி பகுதியில் உள்ள நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் போல வந்த 3 பேர் கொண்ட கும்பல், ஊழியர்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி சுமார் 20 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
நகைக்கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கொள்ளையைத் தடுக்க முயன்றபோது, கும்பலைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொட்டாயி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கொள்ளையர்கள் தமிழக எல்லைப் பகுதிகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)