வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் ரத்து.. சபாநாயகருக்கு மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் ரத்து.. சபாநாயகருக்கு மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

மேற்கு வங்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜியை நியமித்த சபாநாயகரின் உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர்க்கட்சித் தலைவர் நியமன நடைமுறையில் எழுந்துள்ள சர்ச்சைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவின்படி, எதிர்க்கட்சித் தலைவராக ஷோபன்தேப் சட்டோபாத்யாயவை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கான கட்சியின் ஆதரவு கடிதமும் சட்டப்பேரவை சபாநாயகரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், கட்சியின் அதிகாரப்பூர்வ பரிந்துரையை புறக்கணித்து ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அங்கீகரித்தது அரசியல் மற்றும் சட்ட ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்த நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், சபாநாயகர் எடுத்த முடிவை ரத்து செய்து, விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்குமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்வு மற்றும் சட்டப்பேரவை நடைமுறைகள் தொடர்பான விவகாரம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து, சபாநாயகர் இந்த நியமனம் தொடர்பாக மறுபரிசீலனை செய்து அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.