வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
சினிமா

பட விழாவில் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகை திவ்யபாரதி – தயாரிப்பாளருக்காக உருக்கமான பேச்சு!

பட விழாவில் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகை திவ்யபாரதி – தயாரிப்பாளருக்காக உருக்கமான பேச்சு!

மாடலிங் துறையில் இருந்து திரையுலகிற்கு வந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை திவ்யபாரதி. தற்போது அவர் 'கோட்' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தொடர்பாக ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் எதிர்கொண்ட சிரமங்களை நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

 

நிகழ்ச்சியில் பேசிய திவ்யபாரதி, படத்தை உருவாக்கும் பணியில் தயாரிப்பாளர் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் படத்தைக் கைவிட வேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் தானே கெஞ்சியதாகவும், படத்தைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் உருக்கமாக வெளிப்படுத்தினார். அவரது இந்தப் பேச்சு நிகழ்ச்சியில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

 

இதற்கு முன்பாக அவர் நடித்த 'பேச்சுலர்' திரைப்படத்தின் விழாவிலும் திவ்யபாரதி உணர்ச்சிவசப்பட்டு மேடையில் அழுதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 'கோட்' பட விழாவில் அவர் கண்ணீர் மல்க பேசிய சம்பவம் மீண்டும் திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.