வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
சினிமா

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் 'பைரவா'! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் 'பைரவா'! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'பைரவா' திரைப்படம், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன்படி, 2027 ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு வெளியீடாக இப்படத்தை மீண்டும் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியானபோது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், அடுத்த ஆண்டு மீண்டும் வெளியாக இருப்பது விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இயக்குநர் பரதன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வெளியான காலகட்டத்தில் சுமார் ரூ.112 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படும் இப்படத்தை, சிம் சினி இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

 

விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அவர் நடித்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ள 'பைரவா' படத்தைத் திரையரங்குகளில் மீண்டும் கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.