புதன், நவம்பர் 25, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்?..

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்?..

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அருள் விக்னேஷை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.