ஞாயிறு, அக்டோபர் 25, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

பிஎஃப் ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? நவம்பர் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுமா?

பிஎஃப் ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? நவம்பர் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுமா?

 

 

தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான குறைந்தபட்ச பிஎஃப் ஓய்வூதியத்தை மாதம் ரூ.1,000-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 19-ஆம் தேதி குஜராத்தில் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் EPFO மத்தியக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த 2014-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட பின்னர், அதை உயர்த்த வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், ரூ.7,500 ஆக உயர்த்துவது குறித்து அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படவில்லை. இதனால், அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் நிலவுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.