UPI பரிவர்த்தனையில் புதிய உச்சம்! அக்டோபரில் மட்டும் ரூ.31.53 லட்சம் கோடி பணப் பரிமாற்றம்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2026 அக்டோபர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது. அந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 2,547 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது இது 16 சதவீத வளர்ச்சியாகும்.
இந்தப் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.31.53 லட்சம் கோடி மதிப்பிலான பணம் பரிமாறப்பட்டுள்ளது. இதன் சராசரி தினசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியையும் தாண்டியுள்ளது. இந்தியாவில் UPI மூலம் பணம் செலுத்தும் நடைமுறை தொடர்ந்து விரிவடைந்து வருவதை இந்தப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.




கருத்துகள் (0)