செவ்வாய், நவம்பர் 10, 2026
உண்மையின் குரல்
சமையல்

பிரஷர் குக்கரிலேயே மொறுமொறுப்பான சமோசா செய்யலாம் – எண்ணெய் குறைவு, சுவை அதிகம்!

பிரஷர் குக்கரிலேயே மொறுமொறுப்பான சமோசா செய்யலாம் – எண்ணெய் குறைவு, சுவை அதிகம்!

 

சமோசா என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அதிக எண்ணெயில் பொரித்துச் செய்வதால், உடல்நலனைக் கருத்தில் கொண்டு பலரும் அதைச் சாப்பிடத் தயங்குகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு குறைந்த எண்ணெயில் பிரஷர் குக்கரிலேயே சமோசா தயாரிக்கும் இந்த எளிய முறை சிறந்த மாற்றாக இருக்கும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான உப்பு, சிறிதளவு ஓமம் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் மாவைப் பிசைந்து, சிறிது நேரம் மூடி வைக்கவும்.

இதற்கிடையில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து, அதனுடன் பனீர், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான மசாலாப் பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து சுவையான பூரணத்தைத் தயார் செய்ய வேண்டும்.

பின்னர் மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிரித்து நீளமாகத் தேய்த்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவில் மடித்து, அதற்குள் உருளைக்கிழங்கு பூரணத்தை நிரப்பி ஓரங்களை நன்றாக ஒட்ட வேண்டும்.

அடுத்ததாக, பிரஷர் குக்கரின் அடிப்பகுதியில் உப்பைப் பரப்பி, அதன் மீது ஒரு ஸ்டாண்ட் அல்லது தட்டை வைக்கவும். குக்கரை முன்கூட்டியே சூடாக்கிய பிறகு, சமோசாக்களை ஒரு தட்டில் அடுக்கி குக்கருக்குள் வைக்க வேண்டும். மூடியை விசில் மற்றும் கேஸ்கெட் இல்லாமல் வைத்து, குறைந்த தீயில் சமோசாக்கள் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வேகவைக்கலாம்.

இறுதியாகத் தயாரான சமோசாக்களை வெளியே எடுத்து புதினா சட்னி அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறலாம். கடாயில் அதிக எண்ணெய் ஊற்றிப் பொரிக்காமல், வீட்டிலேயே சுவையான சமோசா செய்து ருசிக்க விரும்புபவர்கள் இந்த முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.