ரூ.2,000-க்கு மேல் வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம்? தீபாவளிக்குப் பிறகும் அமல்படுத்தும் தேதி அறிவிக்கப்படாததால் எதிர்பார்ப்பு!

ரூ.2,000-க்கு அதிகமான வணிகப் பயன்பாட்டுக்கான யூபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் MDR கட்டணம் (Merchant Discount Rate) விதிக்கப்படும் என NPCI அறிவித்திருந்த நிலையில், இந்த நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு கட்டணம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வ தேதி வெளியாகவில்லை.
அதேநேரத்தில், தனிநபர்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றங்களுக்கு இந்தக் கட்டணத்தில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதம் ரூ.1 லட்சத்திற்குள் வர்த்தகப் பரிவர்த்தனைகளைப் பெறும் சிறு வியாபாரிகளுக்கும் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வணிகப் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் இந்தக் கூடுதல் கட்டணத்தைச் சில வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடமே வசூலிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)