ஸ்ரீபெரும்புதூர் அருகே கோர விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகள் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும் அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் ரவிசங்கர் தனது மகள் சௌந்தர்யாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குப் பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் பைக் சுமார் 100 மீட்டர் தூரம் லாரியுடன் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரவிசங்கரும் அவரது மகள் சௌந்தர்யாவும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின் தீவிரத்தால் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட விதம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)