தமிழகத்தை நோக்கி நகரும் புதிய புயல்? சென்னை - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வானிலை அமைப்பு நாளை (நவம்பர் 16) புயலாக உருவெடுக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கக்கடலில் நிலவும் வானிலை மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள கணிப்பின்படி, உருவாகும் புயல் நவம்பர் 19-ம் தேதி இரவு அல்லது 20-ம் தேதி அதிகாலையில் சென்னை எண்ணூர் முதல் கடலூர் வரையிலான கடலோரப் பகுதியில் கரையை கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புயலின் நகர்வு, கரையை கடக்கும் இடம் மற்றும் மழையின் தீவிரம் ஆகியவை அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளைப் பொறுத்தே உறுதியாகும்.




கருத்துகள் (0)