ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்.. மனைவியின் முந்தைய திருமணங்கள் குறித்து ஏற்பட்ட தகராறில் கொலை செய்த கணவர்!

திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்.. மனைவியின் முந்தைய திருமணங்கள் குறித்து ஏற்பட்ட தகராறில் கொலை செய்த கணவர்!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியைச் சேர்ந்த சுவேதா (24) என்பவருக்கும், அஜித்குமார் (28) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தனக்கு உறவினர்கள் என யாரும் இல்லை என்று கூறி சுவேதா அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுவேதாவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடைபெற்றிருந்தது பின்னர் அஜித்குமாருக்கு தெரியவந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இந்தச் சூழலில் தீபாவளி தினத்தன்று சுவேதாவின் செல்போனை அஜித்குமார் பார்த்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்து முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அஜித்குமார் அரிவாளால் சுவேதாவை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுவேதா உயிரிழந்தார். சம்பவத்துக்குப் பிறகு அஜித்குமார் நேரடியாக எரியோடு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.