தமிழறிஞர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு: 2026-ம் ஆண்டுக்கான 5 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதன் சிறப்புகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வரும் தமிழறிஞர்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் 2026-ம் ஆண்டிற்கான பல்வேறு விருதுகளை வழங்குவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுகள் தேவநேயப் பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது, தூயதமிழ் ஊடக விருது, நற்றமிழ்ப் பாவலர் விருது மற்றும் தூயதமிழ்ப் பற்றாளர் விருது என மொத்தம் ஐந்து பிரிவுகளின் கீழ் வழங்கப்பட உள்ளன. தமிழ் மொழிக்காகத் தங்களது பங்களிப்பை வழங்கி வரும் தகுதியுடைய தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விருதுகளுக்கான விண்ணப்பங்களை http://sorkuvai.tn.gov.in அல்லது http://awards.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் 2026 டிசம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




கருத்துகள் (0)