வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை.. அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!

மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை.. அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு!

புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் உயிரைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அண்மையில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற சில மீனவர்கள் மாயமான சம்பவங்களிலும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்ட சிக்கல்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதுடன், கடலில் காணாமல் போகும் மீனவர்களை விரைவாகக் கண்டறிந்து மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இயற்கை இடர்பாடுகளின்போது மீனவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தினார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.