தினமும் ரஸ்க் சாப்பிடுகிறீர்களா? உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

பலருக்கும் டீ அல்லது காபியுடன் ரஸ்க் சாப்பிடுவது அன்றாட பழக்கமாக இருந்து வருகிறது. மொறுமொறுப்பான ரஸ்கை பானங்களில் தொட்டு சாப்பிடுவது சுவையாக இருந்தாலும், அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ரஸ்கில் அதிக அளவு சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு சேர்க்கப்படுவதால், தொடர்ந்து சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும் உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும், இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமானம் சீராக நடைபெறாமல் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ரஸ்கில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போதுமான அளவில் கிடைப்பதில்லை. இதனை அடிக்கடி சாப்பிட்டு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில் குறைபாடு ஏற்படலாம்.
எனவே, தினசரி ரஸ்க் சாப்பிடுவதை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.




கருத்துகள் (0)