சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு.. சென்னையிலும் விலை அதிகரிக்க வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 30 டாலர் அதிகரித்து 3,567 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு அவுன்ஸ் 41 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சென்னையில் நேற்று (நவம்பர் 26) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.92,320 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தால், சென்னையிலும் தங்கம் விலை அதிகரிக்கக்கூடும் என்பதால் நகை வாங்க திட்டமிடுபவர்கள் சந்தை நிலவரங்களை கவனித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)