இளம் நண்பர்கள் இருவர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. கேரளாவில் சோக சம்பவம்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே மாமலக்கண்டம் பகுதியில் இளம் நண்பர்கள் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் வாசு (20), அம்ரிதா (19) ஆகியோர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 24ஆம் தேதி விஜய் வாசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த நிலையில் இருந்த அம்ரிதா, மறுநாள் 25ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
அம்ரிதாவின் உயிரிழப்பு தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு இளம் உயிர்கள் பறிபோன இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)