5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை நீக்க வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.
மேற்கண்ட 5 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை காரணமாகக் கொண்டு, இடைத்தேர்தல் நடத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வெளியாகும் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட உள்ளன.




கருத்துகள் (0)