சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
உலகம்

மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை.. குழந்தை பெற்ற ஆசிரியைக்கு 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை!

மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை.. குழந்தை பெற்ற ஆசிரியைக்கு 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆஸ்திரேலியாவில் பள்ளி மாணவனிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு, குழந்தை பெற்றெடுத்த 34 வயதான திருமணமான ஆசிரியைக்கு நீதிமன்றம் 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நவோமி என்ற அந்த ஆசிரியை, மாணவன் 12 வயதாக இருந்த காலத்திலிருந்தே அவரிடம் பாலியல் ரீதியாக தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்தத் தொடர்பின் காரணமாக ஆசிரியைக்கு கர்ப்பம் ஏற்பட்டு, குழந்தையும் பிறந்துள்ளது.

 

இச்சம்பவம் குறித்து மாணவனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், ஆசிரியையின் குற்றம் தொடர்பாக நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.