வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மதுரை நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டதும் கைதி தப்பியோட்டம் – போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

மதுரை நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டதும் கைதி தப்பியோட்டம் – போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

 

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையைச் சேர்ந்த ராஜா என்பவர், போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில், மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, காவல்துறையினரின் பிடியிலிருந்து அவர் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, தப்பியோடிய ராஜாவைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே சட்டம், ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் சூழலில், நீதிமன்ற வளாகத்தில் கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினருக்கு எதிராக முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் தகவல்களும் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனத்தைத் திருப்பியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.