திருப்பரங்குன்றம் மலையில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, கடந்த 24ஆம் தேதி உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடரை எடுத்துச் சென்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு மலைப்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவை தற்காலிகமாக கலைக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.




கருத்துகள் (0)