வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றத்தில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை மீண்டும் தீபம் ஏற்றுவதற்கு இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வாதத்தின்போது, தீபம் ஏற்றுவதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தை தமிழகத்திற்கு மட்டும் தொடர்புடைய பிரச்சினையாகக் கருதி அணுகக் கூடாது என்றும் தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீடித்து வரும் சர்ச்சைக்கு சட்டரீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தொல்லியல் துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் உத்தரவு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.