சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மற்றும் தர்காவுக்கு செல்வோர் தீவிர சோதனைக்கு பின் அனுமதி!

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மற்றும் தர்காவுக்கு செல்வோர் தீவிர சோதனைக்கு பின் அனுமதி!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இன்று (நவ.28) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மலைப்பகுதிக்கு வரும் பக்தர்களை காவல்துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதித்து வருகின்றனர்.

 

அதேபோல், மலைப்பகுதியில் அமைந்துள்ள தர்காவுக்குச் செல்ல வந்த இஸ்லாமியர்களும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனை முடிந்த பின்னர் அவர்கள் தர்காவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 

திருப்பரங்குன்றம் பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் மற்றும் தர்காவுக்கு வருவோரின் வருகையை கண்காணித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.