வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருப்பதி ஏழுமலையான் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த கலைஞர் சீனிவாசன் காலமானார்!

திருப்பதி ஏழுமலையான் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த கலைஞர் சீனிவாசன் காலமானார்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையைச் சேர்ந்த பிரபல ஓவியர் சீனிவாசன் (86), வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். திருப்பதி ஏழுமலையான் திருவுருவத்தைத் தத்ரூபமாக ஓவியமாக வரைந்து புகழ்பெற்ற இவர், தனது கலைத்திறன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர்.

கடந்த 1970ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தின் அழைப்பை ஏற்று, கோயில் கருவறைக்குச் சென்று வெங்கடாசலபதியின் சிலை வடிவத்தை நேரில் பார்வையிட்டு ஓவியமாகத் தீட்டினார். நகைகள் அணிந்த திருவுருவம் மற்றும் நகைகள் இல்லாத திருவுருவம் என இரண்டு விதமாக அவர் வரைந்த ஓவியங்களுக்கும் திருப்பதி தேவஸ்தானம் அங்கீகாரம் வழங்கியது.

இதையடுத்து, அவரது ஓவியங்கள் புகைப்படங்களாகவும், காலண்டர்களிலும் அச்சிடப்பட்டு பொதுமக்களிடம் பரவலாகச் சென்றடைந்தன. வீடுகள் மற்றும் கடைகளில் ஏழுமலையான் படங்களாக இடம்பெற்று தனி அடையாளத்தைப் பெற்றன. இந்நிலையில், ஓவியர் சீனிவாசனின் மறைவுச் செய்தி அறிந்த பலரும் தங்களது இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.