வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு – டிசம்பர் 10க்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு!

தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு – டிசம்பர் 10க்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு!

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஷாஜூ அலெக்ஸ் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜேஷ் விவேகானந்தன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.