சனி, அக்டோபர் 24, 2026
உண்மையின் குரல்
அரசியல்

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் மக்கள் நீதி மய்யம்: செயற்குழு கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் மக்கள் நீதி மய்யம்: செயற்குழு கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

 

மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பொதுமக்கள் நலப்பணிகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வார்டு வாரியாகக் கட்சி நிர்வாகிகள் களப்பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்துகொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், டிசம்பர் 10ஆம் தேதி ஏரியா சபைக் கூட்டங்களை அரசு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. பருவமழைக் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதியன்று ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் களப்பணிகளுடன் சமூக நலச் செயல்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.